Online Bibel

- Annoncer -




எண்ணாகமம் 3:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 ஏனெனில் முதற்பேறுகள் எல்லாம் என்னுடையவை. எகிப்தில் எல்லா முதற்பேறுகளையும் அழித்தபோது, நான் இஸ்ரயேலின் முதற்பேறான மனிதர்களையும், மிருகங்களின் தலையீற்றுகளையும் எனக்காகப் பிரித்தெடுத்தேன். அவை என்னுடையதாய் இருக்கவேண்டும். நான் யெகோவா” என்றார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் கொலைசெய்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்கள்முதல் மிருகஜீவன் வரையுள்ள முதற்பேறான எல்லாவற்றையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதால், அவைகள் என்னுடையவைகளாக இருக்கும்; நான் யெகோவா என்றார்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

13 நீங்கள் எகிப்தில் இருந்தபோது நான் எகிப்திலுள்ள முதலில் பிறந்த அனைத்தையும் கொன்றேன். அந்த நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் ஒவ்வொரு முதல் குழந்தையையும் எனக்குரியதாக நான் எடுத்துக்கொண்டேன். முதலில் பிறந்த அனைத்து குழந்தைகளும், அனைத்து மிருகங்களும் எனக்குரியது. ஆனால் இப்போது உங்களுக்கு முதலில் பிறக்கும் குழந்தைகளை உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன். லேவியர்களை எனக்குச் சொந்தமாக்கிக்கொண்டேன். நானே கர்த்தர்” என்றார்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்முதல் மிருகஜீவன் மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர் என்றார்.

Se kapitlet Kopi




எண்ணாகமம் 3:13

Følg os:

Annoncer


Annoncer