Online Bibel

- Annoncer -




யாக்கோபு 2:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 நீங்கள் பளபளப்பான உடை அணிந்துவந்த அந்த மனிதனைப் பார்த்து, “இங்குள்ள நல்ல இருக்கையில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று, அவனுக்கு விசேஷ கவனிப்பைக் கொடுத்து, அந்த ஏழையைப் பார்த்தோ, “நீ அங்கே நில்” அல்லது, “எனது காலடியில், தரையில் உட்கார்ந்துகொள்” என்றும் சொன்னால்,

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 அழகான ஆடை அணிந்திருந்தவனைப் பார்த்து: ஐயா இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள் என்றும்; ஏழ்மையானவனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் காலடியிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால்,

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

3 நீங்கள் செல்வந்தனிடம் அதிகம் அக்கறை காட்டுகிறீர்கள். “நல்ல ஆசனத்தில் அமருங்கள்” என்று கூறுகிறீர்கள். ஆனால் ஒரு ஏழை வந்தால் அவனை நிற்கவைக்கிறீர்கள். அல்லது தரையிலே உட்காரும்படி கூறுகிறீர்கள்.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 நீங்கள் பளபளப்பான உடை அணிந்து வந்த மனிதனைப் பார்த்து, “நீங்கள் நல்ல இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள்” என்றும், அந்த ஏழையைப் பார்த்து, “நீ அங்கே நில்” அல்லது “எனது காலடியில் உட்கார்ந்துகொள்” என்றும் சொன்னால்,

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால்,

Se kapitlet Kopi




யாக்கோபு 2:3

Følg os:

Annoncer


Annoncer