Online Bibel

- Annoncer -




அப்போஸ்தலர் 7:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 இறைவன் இங்கே ஆபிரகாமுக்கு ஒரு அடி நிலத்தைக்கூட உரிமைச்சொத்தாகக் கொடுக்கவில்லை. ஆனால் அந்தக் காலத்தில் அவனுக்குப் பிள்ளை இல்லாதிருந்தும்கூட, அவனுக்குப்பின் அவனுடைய தலைமுறையினரும் இந்நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள் என்று இறைவன் வாக்குப்பண்ணினார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 இதிலே ஒரு அடி நிலத்தையாவது அவனுக்கு சொத்தாகக் கொடுக்காமல், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதை சொத்தாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

5 ஆனால் தேவன் ஆபிரகாமுக்கு இந்த நாட்டில் எதையும் கொடுக்கவில்லை. ஒரு அடி நிலம் கூடக் கொடுக்கவில்லை. ஆனால் ஆபிரகாமுக்கும் அவர் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் இந்நாட்டைக் கொடுப்பதாக தேவன் வாக்களித்தார். (ஆபிரகாமுக்குக் குழந்தை இல்லாதிருந்தபோது இது நடந்தது)

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 இங்கே இறைவன் அவருக்கு ஒரு அடி நிலத்தைக்கூட உரிமைச் சொத்தாகக் கொடுக்கவில்லை. அச்சந்தர்ப்பத்தில் ஆபிரகாமுக்குப் பிள்ளை இல்லாதிருந்தது. ஆனாலும்கூட, அவருக்கும் அவருக்குப் பின் அவருடைய தலைமுறையினருக்கும் இந்த நாட்டை உரிமையாகக் கொடுப்பேன் என இறைவன் வாக்குறுதியளித்தார்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.

Se kapitlet Kopi




அப்போஸ்தலர் 7:5

Følg os:

Annoncer


Annoncer