Online Bibel

- Annoncer -




ரோமர் 4:17 - பரிசுத்த பைபிள்

17 “அநேக தேசத்து மக்களுக்கு நான் உன்னைத் தகப்பனாக உருவாக்கினேன்” என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கின்றது. இது தேவனுக்கு முன் உண்மையாகின்றது. தேவனால் இறந்தவரை உயிர்த்தெழச் செய்யமுடியும். இதுவரை இல்லாதவற்றை இருப்பதாகக் கொண்டுவர இயலும் என்பதை ஆபிரகாம் நம்பினான்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 “அநேக தேசமக்களுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்” என்று எழுதியிருக்கிறபடி, அவன், தான் விசுவாசித்தவருமாக, மரித்தோரை உயிரோடு எழுப்பி, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாக இருக்கிற தேவனுக்குமுன்பாக நம்மெல்லோருக்கும் தகப்பன் ஆனான்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 “அநேக நாடுகளுக்கு நான் உன்னைத் தந்தையாக்கினேன்” என்று எழுதப்பட்டிருக்கிற வேதவசனத்தின்படியே ஆபிரகாம் தான் விசுவாசித்த இறைவனின் பார்வையில், நம்முடைய தந்தையாய் இருக்கிறான். இறைவனே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறவர்; முன்பில்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிறார் என்று ஆபிரகாம் விசுவாசித்தான்.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

17 “அநேக இன மக்களுக்கு நான் உன்னைத் தந்தையாக்கினேன்” என்று ஆபிரகாமைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அதன்படி இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கின்றவரும் இல்லாதவைகளை கட்டளையிட்டு உருவாக்குபவருமான இறைவனை விசுவாசித்த ஆபிரகாம், இறைவனின் பார்வையில் நம் அனைவருக்கும் தந்தையாய் இருக்கின்றார்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.

Se kapitlet Kopi




ரோமர் 4:17

Følg os:

Annoncer


Annoncer