ரோமர் 2:1 - பரிசுத்த பைபிள்1 மற்றவர்களைக் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்க உன்னால் முடியும் என நீ எண்ணுவாயானால் நீயும் குற்ற உணர்விற்குரியவன்தான். பாவம் செய்பவனாகவும் இருக்கிறாய். அவர்களுக்குத் தீர்ப்பளிக்கிற நீயும் அதே பாவச் செயல்களைச் செய்கிறாய். உண்மையில் நீயே குற்றவாளியாக இருக்கும்போது நீ எவ்வாறு மற்றவர்களைக் குற்றம் சாட்டமுடியும். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 ஆகவே, மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, சாக்குப்போக்குச் சொல்லமுடியாது; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயும் செய்கிறதினால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைநீயே குற்றவாளியாக்குகிறாய். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 மற்றவர்களை நியாயந்தீர்க்கிறவனே, நீ சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. ஏனெனில் எந்தக் காரியங்களில் நீ மற்றவர்களை நியாயந்தீர்க்கிறாயோ, அதே காரியங்களை நீ செய்கிறபடியால், நீ உன்னையே குற்றவாளியெனத் தீர்ப்புச் செய்கிறாய். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 ஆகவே, மற்றவர்களை நியாயம் தீர்க்கும் மனிதனே, நீ யாராக இருந்தாலும், உன்னைத் தப்ப வைக்க காரணங்களைச் சொல்ல முடியாது. ஏனெனில் நீ ஒரு நீதிபதியாக எந்தக் காரியங்களுக்காக மற்றவர்களுக்கு நியாயத்தீர்ப்பு வழங்குகின்றாயோ, அவற்றையே நீயும் தொடர்ந்து செய்யும்போது உனக்கு நீயே தண்டனைத்தீர்ப்பு வழங்குகிறாய். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய். Se kapitlet |