லூக்கா 5:37 - பரிசுத்த பைபிள்37 மக்கள் புதிய திராட்சை இரசத்தைப் பழைய திராட்சை இரசப் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. ஏன்? புதிய திராட்சை இரசம் பைகளைப் பொத்தலாக்கிவிடும். திராட்சை இரசம் சிந்திப்போகும். திராட்சை இரசப் பைகளும் வீணாகிப்போகும். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்37 ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால் புதிய திராட்சைரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், திராட்சைரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202237 யாரும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அப்படிச் செய்தால், புதிய திராட்சை இரசம் அந்த தோல் பைகளை வெடிக்கச்செய்யும்; திராட்சை இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் பாழாய்ப்போகும். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு37 ஒருவனுமே புதிய திராட்சை ரசத்தைப் பழைய தோற்பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அவன் அப்படிச் செய்தால், புதிய திராட்சை ரசம், அந்த தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; திராட்சை ரசமும் வெளியே சிந்தி விடும், தோற்பைகளும் பாழாய்ப் போகும். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)37 ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும். Se kapitlet |