புலம்பல் 1:14 - பரிசுத்த பைபிள்14 “எனது பாவங்கள் நுகத்தைப்போன்று கட்டப்பட்டுள்ளது, எனது பாவங்கள் கர்த்தருடைய கைகளில் கட்டப்பட்டுள்ளது. கர்த்தருடைய நுகம் என் கழுத்தில் இருக்கிறது. கர்த்தர் என்னை பலவீனமாக்கியுள்ளார். நான் எதிர்த்து நிற்க முடியாதபடி கர்த்தர் என்னை ஒடுக்குகிற ஜனங்களின் கையில் கொடுத்திருக்கிறார். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 என் மீறுதல்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனை இழக்கச்செய்தார்; நான் எழுந்திருக்க முடியாதபடி ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 “என்னுடைய பாவங்கள் ஒரு நுகமாக கட்டப்பட்டிருக்கின்றன; அவை அவருடைய கைகளால் ஒன்றாக்கப்பட்டு, என் கழுத்தின்மேல் போடப்பட்டுள்ளன. யெகோவா என் பெலனை குன்றப்பண்ணினார். என்னால் எதிர்க்க முடியாதவர்களிடத்தில் என்னை ஒப்புக்கொடுத்து விட்டார். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 என் பாதகங்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனை விழப்பண்ணினார்; நான் எழுந்திருக்கக்கூடாதபடிக்கு ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார். Se kapitlet |