புலம்பல் 1:1 - பரிசுத்த பைபிள்1 எருசலேம் ஒரு காலத்தில் ஜனங்கள் நிறைந்த நகரமாக இருந்தது. ஆனால் இப்போது, இந்த நகரம் வனாந்தரமாயுள்ளது! எருசலேம் உலகத்தில் பெரிய நகரங்களுள் ஒன்றாயிருந்தது. ஆனால் இப்போது, அவள் ஒரு விதவையைப் போன்றிருக்கிறாள். அவள் ஒரு காலத்தில் நகரங்களில் இளவரசியைப் போன்றிருந்தாள். ஆனால் இப்பொழுது அடிமையாக்கப்பட்டிருக்கிறாள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 2 ஐயோ, மக்கள் மிகுந்த நகரம் தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! தேசங்களில் பெரியவளும், அந்த தேசங்களில் இளவரசியுமாயிருந்தவள் வரிகட்டுகிறவளானாளே! Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 ஒருகாலத்தில் மக்களால் நிறைந்திருந்த எருசலேம் பட்டணம், இப்பொழுது எவ்வளவு பாழாய்க் கிடக்கிறது! ஒருகாலத்தில் நாடுகளின் மத்தியில் மிகவும் பெரியவளாய் இருந்தவள், இன்று ஒரு விதவையைப் போலானாளே! நாடுகளின் மத்தியில் அரசியாய் இருந்தவள் இப்பொழுது அடிமையானாளே. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே! Se kapitlet |