யோனா 3:6 - பரிசுத்த பைபிள்6 நினிவேயின் ராஜா இவற்றைக் கேள்விப்பட்டான், ராஜாவும் தான் செய்த தீங்குகளுக்காக வருத்தப்பட்டான், எனவே ராஜா தனது சிம்மாசனத்தை விட்டு இறங்கினான். ராஜா தனது ராஜாவுக்குரிய ஆடையைக் கழற்றிப் போட்டுவிட்டு துக்கத்தைக் காட்டுவதற்குரிய சிறப்பு ஆடையை அணிந்துகொண்டான். பிறகு ராஜா சாம்பல்மேல் உட்கார்ந்தான், Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன்னுடைய சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் அணிந்திருந்த அங்கியைக் கழற்றிப்போட்டு, சாக்கு உடையை அணிந்துகொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 இந்தச் செய்தி நினிவேயின் அரசனுக்கு எட்டியவுடனே, அவன் தன் அரியணையைவிட்டு எழுந்து, தன் அரச உடையைக் களைந்து, துக்கவுடை உடுத்தி புழுதியில் உட்கார்ந்தான். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான். Se kapitlet |