தீத்து 3:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 இது நம்பத்தகுந்த கூற்று. ஆகவே, இவற்றை நீ வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுதே இறைவனைச் சார்ந்திருக்கின்றவர்கள், நல்ல செயல்களை செய்வதற்குத் தங்களை அர்ப்பணித்து அதிலே குறியாய் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் இவை நலமானதாயும் பயனுள்ளதாயும் இருக்கின்றன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனை விசுவாசிக்கிறவர்கள் நல்ல செயல்களைச்செய்ய ஜாக்கிரதையாக இருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாகப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனிதர்களுக்குப் பிரயோஜனமுமானவைகள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 இது நம்பத்தகுந்த வாக்கு. ஆகவே, நீ இவற்றை வலியுறுத்திச் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுதே இறைவனை சார்ந்திருக்கிறவர்கள், நன்மை செய்வதற்குத் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும்படி கவனமுடையவர்களாய் இருப்பார்கள். இந்தக் காரியங்கள் ஒவ்வொருவருக்கும் நலமானதாயும் பயனுள்ளதாயும் இருக்கின்றன. Viz kapitolaபரிசுத்த பைபிள்8 இந்தப் போதனை உண்மையானது. மக்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்பொழுது தேவனை நம்பும் மக்கள் தம் வாழ்வை நன்மை செய்வதற்குப் பயன்படுத்த எச்சரிக்கையாக இருப்பர். இவை நல்லவை, எல்லா மக்களுக்கும் பயன் உள்ளவை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள். Viz kapitola |