ரோமர் 9:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 ஏனெனில் இறைவன் மோசேயிடம், “நான் யார்மேல் இரக்கமாயிருக்க விருப்பமாயிருப்பேனோ, அவன்மீது இரக்கமாயிருப்பேன். நான் யார்மேல் மன உருக்கமாயிருக்க விருப்பமாயிருப்பேனோ, அவன்மீது மன உருக்கமாயிருப்பேன்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 அவர் மோசேயைப் பார்த்து: எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் இரக்கமாக இருப்பேன், எவன்மேல் உருக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் உருக்கமாக இருப்பேன் என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 ஏனெனில் இறைவன் மோசேயிடம், “நான் யாருக்கு இரக்கம் காட்ட விருப்பமாயிருக்கிறேனோ, அவனுக்கு இரக்கம் காட்டுவேன். யார்மேல் அனுதாபங்கொள்ள விருப்பமாய் இருக்கிறேனோ, அவர்மேல் அனுதாபங்கொள்வேன்” என்றார். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 “நான் யாரிடம் இரக்கம் காட்டவேண்டும் என்று விரும்புகிறேனோ அவனிடம் இரக்கம் காட்டுவேன்.” என்று தேவன் மோசேயிடம் சொல்லி இருக்கிறார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார். Viz kapitola |