ரோமர் 14:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 எனவே உண்ணுகின்றவன் சில உணவுகளை தவிர்த்துக்கொள்கின்றவனை இகழ்வாகப் பார்க்கக் கூடாது. அதுபோல் உண்ணாதவனோ உண்பவன் மீது குற்றம் காணவும் கூடாது. ஏனெனில் இறைவன் அவனை ஏற்றுக்கொண்டிருக்கிறாரே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 சாப்பிடுகிறவன் சாப்பிடாமல் இருக்கிறவனை அற்பமாக நினைக்காமல் இருக்கவேண்டும்; சாப்பிடாமல் இருக்கிறவனும் சாப்பிடுகிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காமல் இருக்கவேண்டும்; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 எனவே எல்லாவகை உணவையும் சாப்பிடுகிறவன் அவற்றைச் சாப்பிடாமல் தவிர்த்துக்கொள்கிறவனை இகழ்வாகப் பார்க்கக்கூடாது. அதுபோல் எல்லாவகை உணவையும் சாப்பிடாதவனோ எல்லாவகை உணவைச் சாப்பிடுகிறவனில் குற்றம் காணவும் கூடாது. ஏனெனில் இறைவன் அவனை ஏற்றுக்கொண்டிருக்கிறாரே. Viz kapitolaபரிசுத்த பைபிள்3 காய்கறிகளை மட்டும் உண்ணுகிறவர்களைப் பார்த்து மற்றவர்கள் அற்பமானவர்களாக எண்ணாமல் இருக்க வேண்டும். காய்கறிகளை மட்டும் உண்ணுகிறவர்களும் மற்றவர்களைத் தவறாக நியாயம் தீர்க்காமல் இருக்கவேண்டும். தேவன் அவனையும் ஏற்றுக்கொண்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே. Viz kapitola |