Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 18:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

23 விளக்கின் வெளிச்சமும் இனியொருபோதும் உன்னிடத்தில் பிரகாசிக்காது. மணமகனின் குரலும், மணமகளின் குரலும் இனியொருபோதும் உன்னிடத்திலே கேட்காது. உன்னுடைய வர்த்தகர்களே உலகத்தில் முக்கியமானவர்களாக இருந்தார்கள். உன்னுடைய மந்திரச் சொற்களினால், எல்லா மக்கள் இனத்தவரும் தவறாக வழிநடத்தப்பட்டார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணமகன் மற்றும் மணமகளுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன்னுடைய வியாபாரிகள் உலகத்தின் முக்கிய நபர்களாக இருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா நாட்டு மக்களும் மோசம்போனார்களே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 விளக்கு வெளிச்சமும் இனியொருபோதும் உன்னிடத்தில் வீசாது. மணமகனின் குரலும் மணமகளின் குரலும் இனியொருபோதும் உன்னிடத்திலே கேட்கமாட்டாது. உன்னுடைய வியாபாரிகள் உலகத்தில் பெரிய மனிதராய் இருந்தார்கள். உன்னுடைய மந்திரச் சொற்களினால் எல்லா நாட்டினரும் தவறாக வழிநடத்தப்பட்டார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

23 இனி விளக்குகளின் ஒளி உன்னிடம் பிரகாசிக்காது. மணமகன் மணமகள் ஆகியோரின் சத்தங்கள் இனி உன்னிடம் கேட்காது. உன் வியாபாரிகள் உலகில் சிறந்தவர்களாக இருந்தார்கள். உலக நாடுகள் எல்லாம் உன் மாயத்தால் மோசம் செய்யப்பட்டன.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 18:23

Následuj nás:

Reklamy


Reklamy