வெளிப்படுத்தல் 18:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 அவர்கள் அழுது புலம்பி, “ ‘ஐயோ பேரழிவு, ஐயோ பேரழிவு மகா நகரமே! மென்மையான பட்டாடையையும் ஊதாநிறத் துணியையும் சிவப்பு நிறத் துணியையும் அணிந்திருந்தவளே! தங்கத்தினாலும் மாணிக்கக் கற்களினாலும், முத்துக்களினாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தவளே! Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 ஐயோ! மெல்லிய ஆடையும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் அணிந்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரே மணிநேரத்தில் எல்லாச் செல்வமும் அழிந்துபோனதே! என்று சொல்லி, அழுது துக்கத்தோடு இருப்பார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 அவர்கள் அழுது புலம்பி: “ ‘ஐயோ கேடு, ஐயோ மகா நகரமே, மென்பட்டையும், ஊதா நிறத்துணியையும், சிவப்பு நிறத்துணியையும் உடுத்தியிருந்தவளே, தங்கத்தினாலும் மாணிக்கக் கற்களினாலும், முத்துக்களினாலும் மினுக்கம் பெற்றிருந்தவளே, Viz kapitolaபரிசுத்த பைபிள்16 அவர்கள் சொல்வார்கள்: “பயங்கரம்! எப்படிப்பட்ட பயங்கரம் அந்த மாநகரத்துக்கு ஏற்பட்டுள்ளது! அவள் மெல்லிய துணி, பீதாம்பரம், சிவப்பாடைகளை அணிந்திருந்தாள். அவள் தங்கம், நகைகள், முத்துக்கள் ஆகியவற்றால் சிங்காரிக்கப்பட்டாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள். Viz kapitola |