வெளிப்படுத்தல் 14:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 இரண்டாவது இறைதூதன் அவனைத் தொடர்ந்து வந்து, “ ‘விழுந்தது! மகா பாபிலோன் விழுந்து போயிற்று,’ அவளே தனது பாலியல் ஒழுக்கக்கேடு எனப்பட்ட கோப மதுவை, எல்லா மக்கள் இனத்தவரும் அருந்தும்படி செய்தவள்” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 வேறொரு தூதன் பின்னேசென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 இரண்டாவது இறைத்தூதன் அவனைத் தொடர்ந்து வந்து, “ ‘விழுந்தது! மகா பாபிலோன் விழுந்து போயிற்று,’ அவள் எல்லா நாட்டு மக்களையும் தனது விபசாரத்தின் ஆவேசமூட்டும் மதுவைக் குடிக்கப்பண்ணினாள்” என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்8 பிறகு இரண்டாம் தேவதூதன் முதல் தூதனைப் பின்தொடர்ந்து வந்தான். அவன், “அவள் அழிக்கப்பட்டாள். பாபிலோன் என்னும் மாநகரம் அழிக்கப்பட்டது. அவள் தன் வேசித்தனமானதும் தேவனுடைய கோபமானதுமான மதுவை எல்லா தேசங்களுக்கும் குடிக்கக் கொடுத்தாள்” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான். Viz kapitola |