Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 14:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 அப்போது நான், பரலோகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்: “இன்று முதல், கர்த்தரில் விசுவாசிகளாக மரணிக்கின்றவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எழுது” என அது சொன்னது. அதற்கு பரிசுத்த ஆவியானவர், “ஆம், அவர்கள் தங்களுடைய கடின உழைப்பிலிருந்து இளைப்பாறுவார்கள். ஏனெனில் அவர்களுடைய நற்செயல்களும் அவர்களுடனேயேகூடப் போகும்” என்றார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்று எழுது; அவர்கள் தங்களுடைய வேலைகளில் இருந்து ஒய்வெடுப்பார்கள்; அவர்களுடைய செய்கைகள் அவர்களோடு கூடப்போகும்; ஆவியானவரும் ஆம் என்று சொல்லியிருக்கிறார் என்று சொல்லியது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 அப்பொழுது நான், பரலோகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்: “இதுமுதல், கர்த்தரில் விசுவாசிகளாகவே மரிக்கின்றவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றெழுது” என்று அது சொன்னது. அதற்கு பரிசுத்த ஆவியானவர், “ஆம், அவர்கள் தங்களுடைய உழைப்பிலிருந்தும், சோதனையிலிருந்தும் இளைப்பாறுவார்கள். ஏனெனில், அவர்களுடைய நற்செயல்களும் அவர்களுடனேயேகூடப் போகும்” என்றார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

13 பிறகு, பரலோகத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டானதைக் கேட்டேன். அது “இதை எழுது: கிறிஸ்துவுக்குள் மரிக்கிறவர்கள் இப்பொழுதிலிருந்து ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றது. “ஆமாம் அவர்கள் தங்கள் கடினமான வேலைகளை விட்டுவிட்டு ஓய்வுபெறுவார்கள். அவர்களது செயல்கள் அவர்களோடு தங்கும், இது முற்றிலும் உண்மை” என்று ஆவியானவரும் கூறுகிறார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போகும்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 14:13

Následuj nás:

Reklamy


Reklamy