வெளிப்படுத்தல் 13:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 அந்த மிருகத்திற்கு இராட்சதப் பாம்பு அதிகாரத்தைக் கொடுத்திருந்ததால், மக்கள் இராட்சதப் பாம்பை வணங்கினார்கள். அத்தோடு, “இந்த மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? இந்த மிருகத்தை எதிர்த்து யுத்தம் செய்ய யாரால் முடியும்?” என்று சொல்லி அவர்கள் அந்த மிருகத்தையும் வணங்கினார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரம் கொடுத்த இராட்சசப் பாம்பை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு நிகரானவன் யார்? அதோடு யுத்தம் செய்பவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அந்த இராட்சதப் பாம்பு மிருகத்திற்கு அதிகாரத்தைக் கொடுத்திருந்ததால், மக்கள் அந்த இராட்சதப் பாம்பை வணங்கினார்கள். அவர்கள் அந்த மிருகத்தையும் வணங்கி, “இந்த மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? இந்த மிருகத்தை எதிர்த்து, யுத்தம் செய்ய யாரால் முடியும்?” என்று கேட்டார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்4 இராட்சசப் பாம்பு அந்த மிருகத்துக்கு அனைத்து பலத்தையும் கொடுத்ததால் மக்கள் அப்பாம்பை வழிபடத் தொடங்கினர். மக்கள் அம்மிருகத்தையும் வழிபட்டனர். அவர்கள், “இம்மிருகத்தைப்போன்று பலமிக்கது வேறு என்ன இருக்கிறது? அதனை எதிர்த்து யாரால் போரிடமுடியும்?” என்று பேசிக்கொண்டனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். Viz kapitola |