மாற்கு 6:22 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 ஏரோதியாளின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் அவனுடைய விருந்தினர்களையும் மகிழ்ச்சிப்படுத்தினாள். எனவே அரசன் அந்தச் சிறுமியிடம், “உனக்கு விருப்பமான எதையும் கேள். அதை நான் உனக்குத் தருவேன்” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 ஏரோதியாளின் மகள் உள்ளே வந்து நடனமாடினாள். அவள் ஏரோதுக்கும் அவனுடைய விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தாள். எனவே அரசன் அந்தச் சிறுமியிடம், “உனக்கு விருப்பமான எதையும் கேள். அதை நான் உனக்குத் தருவேன். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)22 ērōdhiyāɹlin kumārathi sabai naɹduvē vandhu naɹdanam paɹnni ērōdhuvaiyum avanōɹdēhūɹda pandhi irundhavarhaɹlaiyum sandhōsha paɹduthināɹl. apoɹudhu rājā sir̄u peɹnnai nōki: ‘unaku vēɹndiyadhai enniɹdathil kēɹl, adhai unaku tharuvēn,’ endru sonnadhum allāmal; Viz kapitolaபரிசுத்த பைபிள்22 ஏரோதியாளின் குமாரத்தி அந்த விருந்திற்கு வந்து நடனமாடினாள். அவள் ஆடும்போது, ஏரோதும் அவனைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு உண்டனர். ஆகையால் ஏரோது மன்னன் அவளிடம், “நீ விரும்பும் எதையும் உனக்குத் தருவேன்” என்று உறுதி கூறினான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 ஏரோதியாளின் குமாரத்தி சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடேகூடப் பந்தியிருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள், அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொன்னதுமல்லாமல்; Viz kapitola |