மாற்கு 6:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 எதாவது ஒரு இடத்திலுள்ளவர்கள் உங்களை வரவேற்காமலோ, நீங்கள் செல்வதைக் கேட்பதற்கு மனதற்றவர்களாகவோ இருந்தால், நீங்கள் அங்கிருந்து புறப்படும்போது உங்கள் கால் தூசியை அங்கே உதறிவிட்டுப் போங்கள். அது அவர்களுக்கு எதிரான சாட்சியாய் இருக்கும்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வசனங்களைக் கேட்காமலும் இருந்தால், நீங்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்போது, அவர்களுக்கு சாட்சியாக உங்களுடைய கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 எந்த இடத்திலுள்ளவர்களாவது உங்களை வரவேற்காமலோ, நீங்கள் சொல்வதைக் கேட்காமலோ இருந்தால், நீங்கள் அங்கிருந்து புறப்படும்போது, உங்கள் கால் தூசியை அங்கே உதறிவிட்டுப் போங்கள். அது அவர்களுக்கு எதிரான சாட்சியாய் இருக்கும்.” Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)11 evarhaɹlāhilum ungaɹlai yētrukoɹllāmalum, ungaɹl vasanangaɹlai kēɹlāmalum irundhāl nīngaɹl avvidam viɹtu pur̄apaɹdumbōdhu, avarhaɹluku j̄āɹj̄iyāha ungaɹl kālhaɹlin kīɹē paɹdindha thūsiyai udhar̄ipōdungaɹl. niyāyathīrpu nāɹlilē andha paɹtaɹnathitku nērīɹduvadhaipārkilum sōdhōm gomōrā paɹtaɹnathuku nēriɹduvadhu ilahuvāyirukum, endru meiyāhavē ungaɹluku j̄olluhir̄ēn,’ endru solli, avarhaɹlai iraɹndu iraɹndu bērāha anupinār. Viz kapitolaபரிசுத்த பைபிள்11 எந்த ஊராவது உங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தாலோ அல்லது உங்கள் உபதேசங்களைக் கேட்க மறுத்தாலோ அந்த ஊரைவிட்டு விலகுங்கள். உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியையும் அங்கேயே உதறிவிட்டுச் செல்லுங்கள். அவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக்கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். Viz kapitola |