மாற்கு 3:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 அவர்களை அவர் கோபத்துடன் பார்த்து, அவர்களுடைய கடின இருதயத்தின் காரணமாக மனம் வருந்தினார். பின்பு அந்த மனிதனைப் பார்த்து, “உன் கையை நீட்டு” என்றார். அவனும் தன் கையை நீட்டினான். அது முற்றிலும் குணமாகியது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 அவர்களுடைய இருதயத்தின் கடினத்தினால் அவர் விசனப்பட்டு, கோபத்துடன் சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மற்றொரு கையைப்போல சுகமானது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 அவர்களுடைய பிடிவாத இருதயத்தின் நிமித்தம் வருந்தி, சுற்றியிருந்த அவர்களை இயேசு கோபத்துடன் பார்த்து அவனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான், அது முற்றிலுமாக குணமடைந்தது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)5 adhatku avarhaɹl pēsāmal irundhārhaɹl avarhaɹluɹdaiya irudhaya kaɹdinathi nimitham avar visanapaɹtu, kōbathuɹdanē sutrilum irundhavarhaɹlai pārthu, andha manushanai nōki; ‘un kaiyai nīɹtu,’ endrār; avan nīɹtinān; avan kai mar̄ukaiyai pōla j̄osthamāyitru. Viz kapitolaபரிசுத்த பைபிள்5 இயேசு மக்களைப் பார்த்தார். அவருக்கோ கோபம் வந்தது. அவர்கள் கடின மனம் உடையவர்களாய் இருந்ததால் இயேசுவுக்கு வருத்தம் ஏற்பட்டது. இயேசு அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவனும் இயேசுவிடம் தன் கையை நீட்டினான். அது குணமாகியது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று. Viz kapitola |