மாற்கு 14:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 பெத்தானியாவிலே முன்பு தொழுநோயாளியாயிருந்த சீமோன் என்பவனுடைய வீட்டில் இயேசு உணவுப் பந்தியில் அமர்ந்திருக்கும்போது, ஒரு பெண் மிகவும் விலையுயர்ந்த நளதம் என்னும் வாசனைத் தைலம் நிறைந்த ஒரு வெள்ளைக் கல் குடுவையைக் கொண்டுவந்து, அதை உடைத்து அந்த வாசனைத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் விலையுயர்ந்த நளதம் என்னும் சுத்தமான தைலத்தை ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 பெத்தானியாவிலே, அவர் குஷ்டவியாதியாயிருந்த சீமோனுடைய வீட்டில் சாப்பாட்டுப் பந்தியில் இருக்கும்போது, ஒரு பெண் அங்கே வந்தாள்; அவள் நளதம் என்னும் விலையுயர்ந்த நறுமணத் தைலமுள்ள, வெள்ளைக்கல் குடுவையைக் கொண்டுவந்தாள். அவள் அதை உடைத்து, அந்த நறுமணத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)3 avar bethāniyāvil kuɹshtarōhiyāyirundhu simōn vīɹtilē pōjana pandhiyirukaiyil, oru sthirī vilaiyērapetra naɹladham ennum uthama thailam uɹlla veɹllaikal paraɹniyai koɹnduvandhu, adhai uɹdaithu, andha thailathai avar sirasinmēl ūtrināɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்3 இயேசு பெத்தானியாவில் இருந்தார். அவர் தொழுநோயாளியான சீமோனின் வீட்டில் உணவு உண்டுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ஒரு பெண் வந்தாள். அப்பெண்ணிடம் அதிக விலை மதிப்புள்ள நளதம் என்னும் நறுமணத் தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடி இருந்தது. அவள் அந்த ஜாடியைத் திறந்து அந்நறுமணத் தைலத்தை இயேசுவின் தலையில் ஊற்றினாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். Viz kapitola |