Online Bible

- Reklamy -




மாற்கு 11:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

23 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், யாராவது இந்த மலையைப் பார்த்து, ‘நீ போய் கடலில் விழு’ என்று சொல்லி தனது இருதயத்தில் சந்தேகப்படாமல் தான் சொல்வது நடக்கும் என்று விசுவாசித்தால், அது அவர்களுக்குச் செய்யப்படும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 யாராவது இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, கடலில் தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே நடக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது இந்த மலையைப் பார்த்து, ‘நீ போய் கடலில் விழு’ என்று சொல்லி, தமது இருதயத்தில் சந்தேகப்படாமல், தாம் சொல்வது நடக்கும் என்று விசுவாசித்தால், அது அவர்களுக்குச் செய்யப்படும்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

23 evanāhilum indha malaiyai pārthu: “nī peyarndhu, samuthirathilē thaɹll uɹndu bō,” endru solli, thān sonnapaɹdiyē naɹdakum endru than irudhayathil sandhēha paɹdāmal visuvāsithāl, avan sonnabaɹdiyē āhum, endru meiyāhavē ungaɹluku j̄olluhir̄ēn.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

23 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ‘மலையே போ, போய்க் கடலில் விழு!’ என்று உங்களால் மலைக்கு ஆணையிட முடியும். உங்கள் மனதில் சந்தேகம் இல்லாதிருந்தால், நீங்கள் சொல்வது நடக்கும் என்கிற விசுவாசம் உங்களுக்கு இருக்குமானால், தேவன் உங்களுக்காக அவற்றைச் செய்வார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Viz kapitola kopírovat




மாற்கு 11:23

Následuj nás:

Reklamy


Reklamy