Online Bible

- Reklamy -




மாற்கு 11:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

15 பின்னர் அவர்கள் எருசலேமுக்கு வந்தபோது இயேசு ஆலய வளாகத்துக்குள் சென்று, அங்கே பொருட்கள் விற்பவர்களையும், வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார். நாணயமாற்று செய்வோரின் மேசைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்திற்குச் சென்று, ஆலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரர்களுடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய இருக்கைகளையும் கவிழ்த்து,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்கள் விற்பவர்களையும், வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார். காசு மாற்றம் செய்பவர்களின் மேஜைகளையும், புறாக்கள் விற்பவர்களின் இருக்கைகளையும் புரட்டித்தள்ளினார்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

15 avarhaɹl erusalēmuku vandhārhaɹl; iyēsu dhēvālayathil piravēsithu, ālayathil vitkir̄avarhaɹlaiyum koɹlluhir̄avarhaɹlaiyum thurathi viɹtu, kāsukārar uɹdaiya palahaihaɹlaiyum, pur̄ā vitkir̄avarhaɹl uɹdaiya āsanangaɹlaiyum kaviɹthu.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

15 அவர்கள் எருசலேமை அடைந்தனர். அவர் தேவாலயத்திற்குள் நுழைந்தார். அங்கே பொருள்களை விற்றுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்த மக்களை இயேசு விரட்டினார். பலவித பணங்களை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தவர்களின் பலகைகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டார். புறாக்கள் வைத்திருந்த பலகைகளையும் அப்புறப்படுத்தினார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து,

Viz kapitola kopírovat




மாற்கு 11:15

Následuj nás:

Reklamy


Reklamy