Online Bible

- Reklamy -




மாற்கு 10:32 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

32 அவர்கள் எருசலேமுக்குப் போய்க் கொண்டிருக்கும் வழியில் இயேசு அவர்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தார்; அதைக் கண்ட சீடர்கள் வியப்படைய, அவரைப் பின்பற்றிச் சென்ற மற்றவர்களோ பயமடைந்தார்கள். மீண்டும் அவர் பன்னிருவரையும் ஒரு பக்கமாய் அழைத்துச் சென்று தமக்கு நிகழவிருப்பதைக் குறித்து அவர்களுக்குச் சொன்னார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

32 பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்பொழுது, இயேசு அவர்களுக்கு முன்பே நடந்துபோனார்; அவர்கள் ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னால் பயத்தோடு போனார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, தமக்கு நடக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மீண்டும் சொல்லத்தொடங்கினார்:

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

32 அவர்கள் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கும் வழியில், இயேசு அவர்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தார்; சீடர்கள் வியப்படைந்தார்கள். அவரைப் பின்பற்றிச் சென்ற மற்றவர்களோ பயமடைந்திருந்தார்கள். மீண்டும் அவர் பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய், தமக்கு நிகழவிருப்பதைக் குறித்து அவர்களுக்குச் சொன்னார்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

32 pinbu avarhaɹl erusulēmuku pirayāɹnamāi pōhaiyil, iyēsu avarhaɹluku munnē naɹdandhu bōnār; avarhaɹl thihaithu, avaruku pinnē, bayathōɹdē pōnarhaɹl. apoɹudhu avar panniruvaraiyum aɹaithu, thamaku j̄ambavika pōhir̄avaihaɹlai avarhaɹluku mar̄ubaɹdiyum solla thoɹdanginār:

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

32 இயேசுவும் அவரோடு இருந்த மக்களும் அங்கிருந்து எருசலேமுக்குப் போகும் பாதையில் இருந்தனர். அவர்களுக்குத் தலைமையேற்று இயேசு அழைத்துச் சென்றார். இயேசுவின் சீஷர்கள் இதைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் அவர் பின்னால் போன மக்களோ அச்சப்பட்டனர். மீண்டும் இயேசு தன் பன்னிரண்டு சீஷர்களைக் கூட்டி அவர்களோடு தனியாகப் பேசினார். எருசலேமில் அவருக்கு என்ன நடக்கும் என்பதைப்பற்றிக் கூறினார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

32 பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்துபோனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்:

Viz kapitola kopírovat




மாற்கு 10:32

Následuj nás:

Reklamy


Reklamy