Online Bible

- Reklamy -




லூக்கா 6:35 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

35 ஆனால் நீங்களோ உங்கள் பகைவரை அன்பு செய்யுங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். திரும்பிப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பின்றி அவர்களுக்குக் கடன் கொடுங்கள். அப்போது உங்களுக்குக் கிடைக்கும் பிரதிபலன் பெரிதாயிருக்கும். நீங்கள் அதி உன்னதமான இறைவனின் பிள்ளைகளாயிருப்பீர்கள்; ஏனெனில், அவர் நன்றி கெட்டவர்களுக்கும், கொடுமையானவர்களுக்கும் தயவுள்ளவராய் இருக்கின்றாரே.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

35 உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள், நன்மை செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும், உன்னதமான தேவனுக்கு நீங்கள் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

35 ஆனால் நீங்கள் உங்கள் பகைவரில் அன்பாயிருங்கள், அவர்களுக்கு நன்மை செய்யுங்கள், திரும்பிப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பின்றி அவர்களுக்குக் கடன்கொடுங்கள். அப்பொழுது உங்கள் வெகுமதி பெரிதாயிருக்கும், நீங்கள் மகா உன்னதமான இறைவனுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்; ஏனெனில் அவர் நன்றிகெட்டவர்களுக்கும் கொடுமையானவர்களுக்கும் தயவுள்ளவராயிருக்கிறாரே.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

35 “எனவே, பகைவர்களிடம் அன்பு காட்டுங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். திரும்பக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை சிறிதும் இல்லாவிடினும் கூட கடன் கொடுங்கள். நீங்கள் இந்தக் காரியங்களைச் செய்தால் அதற்கு மிகுந்த பலனைப் பெறுவீர்கள். மகா உன்னதமான தேவனின் பிள்ளைகள் ஆவீர்கள். ஆம், ஏனெனில் பாவிகளுக்கும், நன்றியற்ற மனிதர்களுக்கும் தேவன் நல்லவர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.

Viz kapitola kopírovat




லூக்கா 6:35

Následuj nás:

Reklamy


Reklamy