லூக்கா 4:34 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு34 “நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவே போய்விடும்; எங்களோடு உமக்கு என்ன வேலை? எங்களை அழிப்பதற்காகவா வந்திருக்கிறீர்? நீர் யார் என்று எனக்குத் தெரியும். நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்34 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202234 “நசரேயனாகிய இயேசுவே போய்விடும்! எங்களிடம் உமக்கு என்ன வேண்டும்? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்று எனக்குத் தெரியும்; நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்34 “நசரேயனாகிய இயேசுவே! எங்களிடம் என்ன விரும்புகிறீர்? நீர் யார் என்பதை நான் அறிவேன். நீர் தேவனுடைய பரிசுத்தமானவர்” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)34 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்த சத்தமிட்டான். Viz kapitola |