லூக்கா 23:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 ஏரோது, இயேசுவைக் கண்டபோது மிகவும் சந்தோஷப்பட்டான். ஏனெனில், நீண்ட காலமாக அவன் அவரைப் பார்க்க விரும்பியிருந்தான். அவன் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்ததனால், அவரால் செய்யப்படும் சில அற்புதங்களைப் பார்க்க விரும்பினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாக ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைப் பார்த்தபோது, மிகவும் சந்தோஷப்பட்டு, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 ஏரோது இயேசுவைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டான். ஏனெனில், நீண்டகாலமாக அவன் அவரைப் பார்க்க விரும்பியிருந்தான். அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டிருந்ததினால், அவரால் செய்யப்படும் சில அற்புதங்களைப் பார்க்க விரும்பினான். Viz kapitolaபரிசுத்த பைபிள்8 இயேசுவைப் பார்த்ததும் ஏரோது மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவரைப்பற்றி அவன் அதிகமாக கேள்விப்பட்டிருந்தபடியினாலும், இயேசு ஏதேனும் ஓர் அதிசயம் செய்வாரா எனப் பார்க்க விருப்பப்பட்டிருந்தபடியினாலும் அவரைக் காண வெகு நாளாக விருப்பம்கொண்டிருந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 ஏரோது இயேசுவைக்குறித்து அநேகக் காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு, Viz kapitola |