எபிரெயர் 13:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அவசியமான எல்லா நன்மையாலும் உங்களைப் பூரணப்படுத்தி, இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தமது பார்வையில் பிரியமானதை நம்மில் நிறைவேற்றுவாராக. கிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 இயேசுகிறிஸ்துவின் வழியாகத் தமக்கு பிரியமானதை உங்களில் செயலாற்றி, நீங்கள் இறைவனுடைய சித்தத்தின்படி செய்ய உங்களை எல்லா நல்ல செயல்களிலும் ஆயத்தப்படுத்துவாராக. கிறிஸ்துவுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். Viz kapitola |