கலாத்தியர் 3:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 பிரியமானவர்களே, அன்றாட நடைமுறையிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். மனிதரால் எழுதப்பட்ட ஒரு உடன்படிக்கை உறுதி செய்யப்பட்ட பின்பு, ஒருவரும் அதிலிருந்து எதையும் நீக்கிவிடவோ சேர்த்துக்கொள்ளவோ முடியாது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 சகோதரர்களே, மனிதர்களின் முறைகளின்படிச் சொல்லுகிறேன்; மனிதர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடு எதையும் கூட்டுகிறதுமில்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 பிரியமானவர்களே, அன்றாட வாழ்க்கையிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். ஒரு உடன்படிக்கை உறுதிசெய்யப்பட்டபின்பு, ஒருவரும் அதிலிருந்து எதையும் நீக்கவும் முடியாது அதனுடன் எதையும் சேர்த்துக்கொள்ளவும் முடியாது. Viz kapitolaபரிசுத்த பைபிள்15 சகோதர சகோதரிகளே உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். மனிதர்களுக்குரிய உடன்படிக்கையைப் பற்றி எண்ணிப்பாருங்கள். இவ்வாறு மனிதர்களுக்குள் அதிகாரப்பூர்வமாக உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, யாரும் அதில் உள்ளவற்றைத் தள்ளுவதும் இல்லை. புதிதாகச் சேர்த்துக்கொள்ளுவதும் இல்லை, எவரொருவரும் அவற்றை ஒதுக்குவதும் இல்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 சகோதரரே, மனுஷர் முறைமையின்படி சொல்லுகிறேன்; மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடே ஒன்றையும் கூட்டுகிறதுமில்லை. Viz kapitola |