Online Bible

- Reklamy -




கலாத்தியர் 1:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 அத்தோடு யூத மதத்தை பின்பற்றுவதில் எனது சமகால யூதர்களைவிட நானே அதிக தேர்ச்சி பெற்று இருந்ததோடு, நம்முடைய தந்தையர்களின் பாரம்பரியங்களைக் கைக்கொள்வதிலும் தீவிர ஆர்வம் உடையவனாக இருந்தேன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 என் மக்களில் என் வயதுள்ள அநேகரைவிட யூதமதத்தில் தேறினவனாக, என் முற்பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக அதிக பக்திவைராக்கியம் உள்ளவனாக இருந்தேன்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 அப்போது என்னுடைய சமகாலத்து யூதர்களைவிட, நானே யூத மதக் கோட்பாடுகளில் முன்னேறியவனாய் இருந்தேன். நம்முடைய தந்தையர்களின் பாரம்பரியங்களைக் கைக்கொள்வதில் தீவிர ஆர்வம் உடையவனாய் இருந்தேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

14 நான் யூதர்களின் மதத்தில் தலைவனாக இருந்தேன். என் வயதுள்ள மற்ற யூதர்களைவிட நான் அதிகச் செயல்கள் செய்தேன். மற்றவர்களைவிட நான் பழைய மரபு விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க முயன்றேன். அவ்விதிகள் நமது முன்னோர்களிடமிருந்து நாம் பெற்றவை ஆகும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.

Viz kapitola kopírovat




கலாத்தியர் 1:14

Následuj nás:

Reklamy


Reklamy