அப்போஸ்தலர் 24:22 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 அப்போது கிறிஸ்துவின் மார்க்கத்தை நன்கு நுணுக்கமாக அறிந்திருந்த பேலிக்ஸ், “படைத்தளபதி லீசியா வரும்போது உங்கள் வழக்கிற்குத் தீர்ப்பு கூறுவேன்” என்று சொல்லி, விசாரணையை ஒத்தி வைத்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 இந்த மார்க்கத்தின் விஷயங்களை தெளிவாக அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: இராணுவ அதிபதி லீசியா வரும்போது உங்களுடைய காரியங்களைக் கண்டிப்பாய் விசாரிப்பேன் என்று சொல்லி; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 அப்பொழுது இந்த வழியை நன்றாக அறிந்திருந்த பேலிக்ஸ் விசாரணையை ஒத்திப்போட்டான். அவன், “படைத்தளபதி லீசியா வரும்போது, உங்கள் வழக்கிற்குத் தீர்ப்பு கூறுவேன்” என்று சொன்னான். Viz kapitolaபரிசுத்த பைபிள்22 இயேசுவின் வழிகளைக் குறித்து ஏற்கனவே பெலிக்ஸ் நிரம்பத் தெரிந்துவைத்திருந்தான். அவன் வழக்கை இந்த இடத்தில் நிறுத்தியவனாக, “அதிகாரி லீசியா இங்கு வருகிறபோது, இவற்றைக் குறித்து முடிவெடுப்பேன்” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 இந்த மார்க்கத்தின் விஷயங்களை விவரமாய் அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: சேனாதிபதியாகிய லீசியா வரும்போது உங்கள் காரியங்களைத் திட்டமாய் விசாரிப்பேன் என்று சொல்லி; Viz kapitola |