அப்போஸ்தலர் 24:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 பவுல் பதிலளிக்கும்படி ஆளுநர் சைகை காட்டியபோது பவுல் சொன்னதாவது: “நீங்கள் பல வருடங்களாக இந்த நாட்டின் மேல் நீதிபதியாய் இருக்கின்ற அனுபவம் வாய்ந்த ஒருவர் என்று நான் அறிவேன். எனவே நான் மகிழ்ச்சியுடனே எனது சார்பாய் எனது எதிர்த்தரப்பு வாதத்தை முன்வைக்கின்றேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 பவுல் பேச தேசாதிபதி அனுமதித்தபோது, அவன் பதிலாக: நீர் அநேக வருடகாலமாக இந்த நாட்டாருக்கு நீதிபதியாக இருக்கிறீர் என்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் பதில் சொல்லுகிறேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 பவுல் பேசும்படி ஆளுநர் சைகை காட்டியபோது, அவன் சொன்னதாவது: “பலவருடங்களாக இந்த நாட்டின்மேல் நீர் நீதிபதியாய் இருப்பதை நான் அறிவேன்; எனவே நான் மகிழ்ச்சியுடனே எனது சார்பாய்ப் பேசுகிறேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 பவுல் பேசுமாறு ஆளுநர் குறிப்பிட்டார். எனவே பவுல் பதிலாக, “ஆளுநர் பெலிக்ஸ் அவர்களே, இந்தத் தேசத்தின் நியாயாதிபதியாக, நீண்ட காலமாக நீங்கள் இருந்து வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே நான் உங்கள் முன்பு எனக்காக வழக்காடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 பவுல் பேசும்படி தேசாதிபதி சைகைகாட்டினபோது, அவன் உத்தரவாக: நீர் அநேக வருஷகாலமாய் இந்த தேசத்தாருக்கு நியாயாதிபதியாயிருக்கிறீரென்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் உத்தரவு சொல்லுகிறேன். Viz kapitola |