அப்போஸ்தலர் 20:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அங்கே அவன் மூன்று மாதங்கள் தங்கியிருந்தான். ஆயினும், அவன் கப்பல் மூலமாக சீரியாவுக்குப் புறப்பட இருக்கையில் யூதர்கள் அவனுக்கு எதிராய் சதி செய்தார்கள். அதனால் அவன், திரும்பி மக்கெதோனியா வழியாகப் போகத் தீர்மானித்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அங்கே அவன் மூன்று மாதங்கள் வசித்தபின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்திற்குப்போக நினைத்தபோது, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி இரகசியமாக யோசனை செய்துகொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின்வழியாகத் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 அங்கே அவன் மூன்று மாதங்கள் தங்கியிருந்தான். ஏனெனில், அவன் கப்பல் ஏறி சீரியாவுக்குப் புறப்பட இருக்கையில், யூதர்கள் அவனுக்கு எதிராய் சதி செய்தார்கள். அதனால் அவன், திரும்பி மக்கெதோனியா வழியாகப் போகத் தீர்மானித்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்3 அவன் அங்கு மூன்று மாதங்கள் தங்கினான். அவன் சிரியாவுக்குக் கடற்பயணம் செய்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தான். ஆனால் சில யூதர்கள் அவனுக்கெதிராகத் திட்டம் வகுத்துக்கொண்டிருந்தனர். எனவே பவுல் மக்கதோனியா வழியாக சிரியாவுக்குத் திரும்பிப் போக முடிவு செய்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்த பின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனை கொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான். Viz kapitola |