அப்போஸ்தலர் 17:27 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு27 மனிதர்கள் தன்னை நாடித் தேட வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்திருக்கின்றார். இப்படி தட்டுத் தடுமாறியேனும் தன்னை அவர்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். ஆனாலும் நம்மில் ஒருவருக்கும் அவர் தூரமாய் இருப்பவர் அல்ல. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 கர்த்தராகிய அவரை மக்கள் தடவியாவது தேடிக் கண்டுபிடிக்கும்படி அப்படிச் செய்தார்; அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகில் உள்ளார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 மனிதர் இறைவனைத் தேடவேண்டும் என்பதற்காகவே அவர் இப்படிச் செய்திருக்கிறார். அவர்கள் தம்மை நாடித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பு. எனினும் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே இருக்கிறார். Viz kapitolaபரிசுத்த பைபிள்27 “மக்கள் தன்னைத் தேடவேண்டுமென்று தேவன் விரும்பினார். அவர்கள் எல்லா இடங்களிலும் தேடி அவரைக் கண்டுகொள்ளக்கூடும். ஆனால் அவர் நம் ஒவ்வொருவருக்கும் தொலைவில் இல்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. Viz kapitola |