2 பேது 2:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 பேராசை கொண்ட இவ்வாறான போலி போதகர்கள், புனையப்பட்ட கதைகளைச் சொல்லி உங்களிடம் தங்களுக்குச் சுயலாபம் தேடுவார்கள். அவர்களுக்குரிய தண்டனை நீண்ட காலமாகவே ஆயத்தமாயிருக்கிறது, அவர்கள்மீது வரவிருக்கும் அழிவு உறங்கிக் கொண்டிருக்கவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 பொருளாசை உள்ளவர்களாக, தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; ஆதிகாலம்முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காத்திருக்காது, அவர்களுடைய அழிவு தாமதிக்காது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 இந்த வேத ஆசிரியர் தங்களுடைய பேராசையில் தாங்களே இயற்றிய கட்டுக்கதைகளைச் சொல்லி, உங்களைச் சுரண்டி வாழப்பார்ப்பார்கள். அவர்களுக்குரிய தண்டனைத்தீர்ப்பு அவர்கள்மேல் விழ, இறைவனால் வெகுகாலத்திற்கு முன்னரே ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள்மேல் வரவிருக்கும் அழிவு உறங்காது. Viz kapitolaபரிசுத்த பைபிள்3 அவர்களின் பேராசையால் அந்தப் போலிப் போதகர்கள் உண்மையற்ற போலியான போதனைகள் மூலம் உங்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள். வெகு காலத்திற்கு முன்பே தேவன் அவர்களுக்குத் தண்டனையை அறிவித்தார். இது வெறும் அச்சமூட்டத்தக்க பேச்சு அல்ல, அவர்களின் அழிவு தயாராகக் காத்திருக்கிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது. Viz kapitola |