2 கொரி 3:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 கற்களின் மேல் பொறிக்கப்பட்ட எழுத்துக்களினாலானதும் மரணத்தைக் கொண்டுவந்ததுமான அந்த பழைய ஊழியமானது மகிமையுள்ளதாய், இஸ்ரயேலர்களால் மோசேயின் முகத்தை நேராகப் பார்க்கக்கூட முடியாத, பிரகாசத்துடன் வந்தது. இறுதியில் மறைந்து போன அந்த மகிமையே அப்படிப்பட்டது எனில், Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பொறிக்கப்பட்டிருந்த மரணத்திற்கான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமையின் பிரகாசம் உண்டானதினால், இஸ்ரவேல் மக்கள் அவன் முகத்தை நேரடியாகப் பார்க்கமுடியாமல் இருந்தார்களே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 கற்களின்மேல் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, மரணத்தைக் கொண்டுவந்த பணி மகிமையுடன் வந்தது. மோசேயின் முகம் பிரகாசிக்கின்ற ஒளியாய் இருந்தபடியினால், இஸ்ரயேலர்களால் அவனுடைய முகத்தை நேராகப் பார்க்க முடியாதிருந்தது! ஆனால், அது மங்கிப்போகின்ற ஒளியாகவே இருந்தது. Viz kapitolaபரிசுத்த பைபிள்7 மரணத்துக்கு வழி வகுக்கும் சேவைக்குரிய பிரமாணங்கள் கற்களில் எழுதப்பட்டன. அது தேவனுடைய மகிமையோடு வந்தது. அதனால் மோசேயின் முகம் ஒளி பெற்றது. அந்த ஒளி இஸ்ரவேல் மக்களைப் பார்க்க இயலாதபடி செய்தது. அந்த மகிமை பிறகு மறைந்துபோனது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே. Viz kapitola |