Online Bible

- Reklamy -




2 கொரி 12:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

11 நான் மதியற்ற ஒருவனைப் போல் என்னை ஆக்கிக் கொண்டேன். நீங்களே என்னை அந்நிலைக்கு உள்ளாக்கினீர்கள். உங்களால் நான் பாராட்டப்பட்டிருக்க வேண்டும். நான் ஒரு வெற்று மனிதனாய் இருந்தாலும், உங்களுடைய இந்த “மகா அப்போஸ்தலர்களை” விட எவ்விதத்திலும் நான் குறைந்தவனல்ல.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 மேன்மைபாராட்டி, புத்தியீனன் ஆனேன்; நீங்களே இதற்கு என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லை என்றாலும், பிரதான அப்போஸ்தலர்களுக்கும் நான் சிறிதளவும் குறைந்தவனாக இல்லாதபடியால், உங்களாலே பாராட்டப்பட வேண்டியதாக இருந்ததே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 நான் என்னை ஒரு முட்டாள் ஆக்கினேன். ஆனால் நீங்களே என்னை அந்நிலைக்கு உள்ளாக்கினீர்கள். நீங்கள் என்னைப் பாராட்டியிருக்க வேண்டும். நான் ஒன்றுமில்லை என்றாலும், உங்களுடைய இந்த “மாண்புமிகு அப்போஸ்தலர்களைவிட” எவ்விதத்திலும் குறைந்தவனுமல்ல.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

11 நான் முட்டாளைப் போன்று பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். இவ்வாறு நீங்களே என்னைச் செய்தீர்கள். நீங்களெல்லாம் என்னைப் பாராட்டியிருக்கலாம். நான் அதற்குத் தகுதியுடையவன் அல்லன். எனினும் என்னை “அந்த மகா பிரதான அப்போஸ்தலர்களோடு” ஒப்பிடும்போது நான் குறைந்தவன் அல்லன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்த வனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.

Viz kapitola kopírovat




2 கொரி 12:11

Následuj nás:

Reklamy


Reklamy