1 தீமோ 5:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 விசுவாசியான ஒரு பெண்ணின் குடும்பத்தில் விதவைகள் இருப்பார்களானால், அவர்களை அப்பெண்ணே பராமரிக்க வேண்டும். அந்தப் பாரத்தை திருச்சபையின் மேல் சுமத்தக் கூடாது. அப்போதுதான் உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு திருச்சபையால் உதவி செய்ய முடியும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 விசுவாசியாகிய பெண்ணின் சொந்தத்தில் விதவைகள் இருந்தால், அவள் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்; சபையானது ஆதரவற்ற விதவைகளுக்கு உதவிசெய்யவேண்டியிருப்பதால் அந்தச் சுமையை அதின்மேல் வைக்கக்கூடாது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 ஒரு விசுவாச பெண்ணின் குடும்பத்தில் விதவைகள் இருந்தால், அந்த விசுவாசியே அவர்களைப் பராமரிக்க வேண்டும். திருச்சபையின்மேல் இந்தப் பாரத்தைச் சுமத்தக் கூடாது. அப்பொழுதுதான், உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு திருச்சபை உதவிசெய்ய முடியும். Viz kapitolaபரிசுத்த பைபிள்16 விசுவாசமுள்ள ஒரு பெண்ணின் குடும்பத்தில் எவரேனும் விதவைகள் இருந்தால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அவர்கள் கவனிக்கப்பட வேண்டும் என உதவிகளுக்காக சபையில் சென்று தொந்தரவு செய்யக் கூடாது. அப்பொழுது குடும்பமே அற்ற விதவைகளைக் கவனிக்கும் பொறுப்பை மட்டுமே சபை ஏற்றுக்கொள்ள இயலும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்ய வேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது. Viz kapitola |