ரோமர் 9:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 ஒரே களிமண்ணைப் பிசைந்து சில பாத்திரங்களை மேன்மையான உபயோகத்திற்கென்றும், சில பாத்திரங்களை சாதாரண உபயோகத்திற்கென்றும் உருவாக்குவதற்குக் குயவனுக்கு உரிமை இல்லையா? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? Viz kapitolaபரிசுத்த பைபிள்21 ஜாடியைச் செய்கிறவன் தன் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதே களிமண்ணால் அவன் வேறு எந்தப் பொருளை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஒரு பொருளை அவன் சிறப்பான பயனுக்காகவும், மற்றொன்றை அவன் அன்றாட பயனுக்காகவும் செய்யலாம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 ஒரே களிமண்ணிலிருந்து ஒரு பாத்திரத்தை உயர்ந்த நோக்கத்திற்காகவும், மற்றொன்றை சாதாரண நோக்கத்திற்காகவும் உருவாக்குவதற்கு பாத்திரத்தை வனைபவனுக்கு உரிமை இல்லையா? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? Viz kapitola |