ரோமர் 9:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 ஆனால் இந்த இரட்டைப் பிள்ளைகள் பிறக்கும் முன்னதாகவே, மூத்தவன் இளையவனுக்குப் பணிசெய்வான் என்று சொல்லப்பட்டது. அவர்கள் எந்தவித நன்மையையும் தீமையையும் செய்வதற்கு முன்னதாகவே, இறைவன் தாம் தெரிந்துகொள்வதன் நோக்கத்தை இவ்வாறு நிலைநிறுத்தினார்: Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 குழந்தைகள் இன்னும் பிறக்காமலும், நன்மை தீமை ஒன்றும் செய்யாமல் இருக்கும்போது, தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படி இருக்கிற அவருடைய தீர்மானம், செயல்களினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படி, Viz kapitolaபரிசுத்த பைபிள்11-12 இரு குமாரர்களும் பிறப்பதற்கு முன்பே தேவன் ரெபேக்காவிடம், “மூத்த குமாரன் இளையவனுக்கு சேவை செய்வான்” என்றார். அவர்கள் நல்லதோ தீயதோ எதுவாக இருந்தாலும் செய்வதற்கு முன்னரே தேவன் இவ்வாறு சொன்னார். இத்திட்டம் ஏற்கெனவே தேவனால் உருவாக்கப்பட்டது என்பதுதான் காரணம். தேவன் அவனைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். அதனால் தேர்ந்தெடுத்தார். அதுதான் காரணமே தவிர பிள்ளைகள் ஏதோ செய்ததற்காக அல்ல. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 பிள்ளைகள் பிறக்கும் முன்னதாகவே, அதாவது அவர்கள் நன்மை தீமை ஒன்றும் செய்வதற்கு முன்பே அவ்விருவரில் ஒருவரை இறைவன் தெரிவு செய்தார். இறைவன் எந்த நோக்கத்திற்காக தெரிவு செய்தாரோ அந்த நோக்கத்தை எந்த மனிதனதும் நல்ல செயல்களினால் நிறைவேற்றாமல், இறைவனின் அழைப்பினாலே நிறைவேற்றும்படியாக, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு, Viz kapitola |