ரோமர் 11:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 நல்ல ஒலிவமரத்திலிருந்து சில கிளைகள் முறிக்கப்பட்டு, அவ்விடங்களில் காட்டு ஒலிவமரத்தின் கிளைகளாகிய நீங்கள் ஒட்டப்பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது நல்ல ஒலிவமரத்தின் வேரிலிருந்து வரும் சாரத்திலே நீங்களும் பங்குபெறுகிறீர்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 சில கிளைகள் முறித்துப் போடப்பட்டிருக்க, காட்டு ஒலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும், சாரத்திற்கும் உடன்பங்காளியாக இருந்தால், Viz kapitolaபரிசுத்த பைபிள்17 ஒலிவ மரத்தின் சில கிளைகளை ஒடித்தெறிந்து விட்டு அந்த இடத்தில் காட்டு ஒலிவ மரத்தின் கிளைகளை ஒட்ட வைத்தால் எப்படி இருக்ககுமோ அப்படி இருக்கிறீர்கள். யூதரல்லாத நீங்கள் காட்டு ஒலிவ மரத்தைப் போன்றவர்கள். யூதரல்லாத நீங்கள் யூதர்களோடு இணைத்து வைக்கப்பட்டு, நீங்களும் அதே வேர்களைப் பங்கிட்டு, மரச் சாற்றிலிருந்து குடிக்கிறீர்கள். யூதர்களின் பலனையும் பெறுகின்றீர்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 நல்ல ஒலிவ மரத்திலிருந்து சில கிளைகள் முறித்தெறியப்பட்டு, அதற்குப் பதிலாகக் காட்டு ஒலிவ மரத்தின் தளிர்களாகிய நீங்கள், எஞ்சிய கிளைகளிடையே ஒட்டு மரமாய் இணைக்கப்பட்டீர்கள். அதனால், இப்போது நல்ல ஒலிவ மரத்தின் வேரிலிருந்து வரும் சாரத்திலே நீங்களும் ஊட்டம் பெறுகிறீர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால், Viz kapitola |