ரோமர் 10:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 எனவே அவர்கள் கேள்விப்படவில்லையா என்று நான் கேட்கிறேன்? நிச்சயமாகவே அவர்கள் கேள்விப்பட்டார்கள். ஏனெனில் வேதவசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறபடி: “அவர்களின் குரல் பூமியெங்கும் சென்றது, அவர்களுடைய வார்த்தைகள் உலகத்தின் கடைசிவரைக்கும் சென்றன.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூமியின் கடைசிவரைக்கும் செல்லுகிறதே. Viz kapitolaபரிசுத்த பைபிள்18 ஆனால் “மக்கள் நற்செய்தியைக் கேட்டதில்லையா?” என்று நான் கேட்கிறேன். ஆமாம். “அவர்களின் சப்தங்கள் உலகம் முழுவதும் சென்றன. அவர்களின் வார்த்தைகள் உலகின் கடைசிவரை பரவின” என்று எழுதப்பட்டது போல் அவர்கள் கேட்டார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 அப்படியானால் இஸ்ரயேலர் நற்செய்தியைக் கேள்விப்படவில்லையா என்று நான் கேட்கின்றேன்? ஆம், நிச்சயமாகவே அவர்கள் கேள்விப்பட்டார்கள். ஏனென்றால் வேதவசனம் இறைவனின் செய்தியைப்பற்றி, “செய்தியை கொண்டுவருகின்றவர்களின் குரல் பூமி எங்கும் சென்றது. அவர்களுடைய வார்த்தைகள் உலகத்தின் கடைமுனை வரைக்கும் சென்றன” என்கிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே. Viz kapitola |