வெளிப்படுத்தல் 21:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 அப்பொழுது, அந்த இறைத்தூதன் என்னை ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில், ஒரு பெரிய உயர்ந்த மலைக்குக் கொண்டுபோனான். அவன் இறைவனிடமிருந்து, பரலோகத்தைவிட்டு கீழே வந்துகொண்டிருந்த, பரிசுத்த நகரமாகிய எருசலேமை எனக்குக் காண்பித்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 பெரிதும் உயரமுமான ஒரு மலையின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 அவன் ஆவியானவரால் என்னை மிகப் பெரிய உயர்ந்த மலை ஒன்றுக்கு தூக்கிச் சென்றான். அவன் எனக்கு எருசலேம் என்ற பரிசுத்தமான நகரத்தைக் காட்டினான். அது தேவனிடமிருந்து வானினின்று வெளிப்பட்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 அப்போது, ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் என்னை ஒரு பெரிய உயர்ந்த மலைக்கு அந்த இறைதூதன் கொண்டு சென்றான். அவன் எனக்கு பரிசுத்த நகரமாகிய எருசலேம், இறைவனிடமிருந்து பரலோகத்தை விட்டு கீழே வந்துகொண்டிருந்ததைக் காண்பித்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். Viz kapitola |