வெளிப்படுத்தல் 19:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 பின்பு நான், அந்த மிருகத்தையும், பூமியின் அரசர்களையும், அவர்களின் இராணுவங்களையும் கண்டேன். அவர்கள் குதிரையில் ஏறியிருந்தவரையும், அவருடைய படையையும் எதிர்த்து யுத்தம் செய்யும்படி, ஒன்றுகூடி நின்றார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய படைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய படைகளோடும் யுத்தம்பண்ணுவதற்கு வருவதைப் பார்த்தேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்19 பிறகு நான் அந்தக் குதிரையின் மேல் ஏறி இருக்கிறவரையும் அவரது படையையும் எதிர்த்துப் போரிட அந்த மிருகமும் தன் படைகளுடன் பூமியின் ராஜாக்களும் ஒருங்கிணைந்ததைக் கண்டேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 அதன்பின்பு குதிரையில் ஏறியிருந்தவரையும் அவருடைய படையையும் எதிர்த்து யுத்தம் செய்யும்படியாக அந்த மிருகமும் பூமியின் அரசர்களும் அவர்களின் இராணுவங்களும் ஒன்றுகூடி இருப்பதைக் கண்டேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன். Viz kapitola |