வெளிப்படுத்தல் 18:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 அவன் வல்லமையான குரலிலே சத்தமிட்டுச் சொன்னதாவது: “ ‘விழுந்தது! விழுந்தது! மாபெரும் பாபிலோன் விழுந்து போயிற்று!’ அவள் பிசாசுகளுக்கு உறைவிடமானாள். எல்லாத் தீய ஆவிகளுக்கும் இருப்பிடமானாள். அவள் அசுத்தமும் அருவருப்புமான எல்லாப் பறவைகளுக்கும், வெறுக்கத்தக்க மிருகங்களுக்கும் புகலிடமானாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 அவன் அதிக சத்தமிட்டு: “மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், எல்லாவித அசுத்தஆவிகளுக்கும் காவல் வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள எல்லாவித பறவைகளுடைய கூடுமானது. Viz kapitolaபரிசுத்த பைபிள்2 அத்தூதன் உரத்த குரலில் கூவினான்: “அவள் அழிக்கப்பட்டாள்! மாநகரமான பாபிலோன் அழிக்கப்பட்டது! அவள் பிசாசுகளின் குடியிருப்பானாள். அந்நகரம் ஒவ்வொரு அசுத்தமான ஆவியும் வசிக்கிற இடமாயிற்று. எல்லாவிதமான அசுத்தமான பறவைகளுக்கும் அது ஒரு கூடானது. அசுத்தமானதும் வெறுக்கத்தக்கதுமான ஒவ்வொரு மிருகத்திற்கும் அது ஒரு நகரமாயிற்று. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 அவன் வல்லமையான குரலிலே சத்தமிட்டுச் சொன்னதாவது: “ ‘விழுந்தது! விழுந்தது! மாபெரும் பாபிலோன் விழுந்து போயிற்று!’ பிசாசுகளுக்கு அவள் உறைவிடமானாள். எல்லாத் தீய ஆவிகளுக்கும் இருப்பிடமானாள். அவள் அசுத்தமும் அருவருப்புமான எல்லாப் பறவைகளுக்கும், வெறுக்கத்தக்க மிருகங்களுக்கும் புகலிடமானாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று. Viz kapitola |