வெளிப்படுத்தல் 18:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 அவர்கள் தங்கள் தலைகளில் புழுதியைப் போட்டுக்கொண்டு: “ ‘ஐயோ கேடு! ஐயோ மகா நகரமே, கப்பல் உரிமையாளர்கள் எல்லாம் அவளுடைய செல்வத்தினால்தானே செல்வந்தரானார்களே! ஒருமணி நேரத்தில் அவள் இவ்விதமாய் பாழாய்ப்போனாளே!’ என்று அழுது புலம்புவார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: ஐயோ, மகா நகரமே! கடலிலே கப்பல்களை உடையவர்கள் எல்லோரும் இவளுடைய செல்வத்தினால் செல்வந்தர்களானார்களே! ஒருமணி நேரத்திலே இவள் அழிந்துபோனாளே!” என்று அழுது துக்கத்தோடு ஓலமிடுவார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்19 தங்கள் தலைமேல் புழுதியைப் போட்டுக்கொண்டார்கள். அவர்கள் அழுது துக்கப்பட்டார்கள். அவர்கள் சத்தமாய்க் கூறினார்கள்: “பயங்கரம்! எப்படிப்பட்ட பயங்கரம் அந்த மாநகரத்துக்கு ஏற்பட்டுள்ளது! கடலில் சொந்தக் கப்பல்களுள்ள அனைவரும் அவளது செல்வத்தால் பணக்காரர்கள் ஆனார்கள்! ஆனால் அவளோ ஒரு மணிநேரத்தில் அழிந்து போனாள்! Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 அவர்கள் தங்கள் தலைகளில் புழுதியை வாரி இறைத்து, அழுது புலம்பி, “ ‘ஐயோ பேரழிவு! ஐயோ பேரழிவு மகா நகரமே, கப்பல் உரிமையாளர்கள் எல்லோரும் அவளுடைய செல்வத்தினால்தானே செல்வந்தர்கள் ஆனார்கள்! ஒரு மணி நேரத்தில் அவள் பாழாய் போனாளே’ என்று கதறுவார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 தங்கள் தலைகள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையிலே இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள். Viz kapitola |