வெளிப்படுத்தல் 17:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினால் வெறிகொண்டிருந்ததை நான் கண்டேன். அதாவது இயேசுவுக்கு சாட்சிகளாய் இருந்தவர்களின் இரத்தமே. நான் அவளைக் கண்டு மிகவும் வியப்படைந்தேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைப் பார்த்தேன்; அவளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 அப்பெண் குடித்திருந்ததை நான் பார்த்தேன். அவள் தேவனின் பரிசுத்தமான மக்களின் இரத்தத்தாலும், இயேசுவின் சாட்சிகளின் இரத்தத்தாலும் நிலைதடுமாறி இருந்தாள். அவளைப் பார்த்தபோது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தை, அதாவது இயேசுவுக்கு சாட்சிகளாய் இருந்தவர்களின் இரத்தத்தை அருந்தி மதுவெறி கொண்டிருந்ததை நான் கண்டேன். அவளைக் கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். Viz kapitola |