வெளிப்படுத்தல் 12:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 அந்தப் பெண்ணுக்கு, ஒரு பெரிய கழுகினுடைய இரண்டு சிறகுகள் கொடுக்கப்பட்டிருந்தன. இதனால் அவள், பாலைவனத்திலே தனக்கு ஆயத்தப்படுத்தப்பட்ட இடத்திற்கு பறந்து போகக்கூடியதாயிருந்தது. அங்கே அவள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும், அந்த இராட்சதப் பாம்பின் பிடியில் அகப்படாமல் பராமரிக்கப்படுவாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 அந்தப் பெண் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாக வனாந்திரத்தில் உள்ள தன் இடத்திற்குப் பறந்துபோவதற்காக பெரிய கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது. Viz kapitolaபரிசுத்த பைபிள்14 ஆனால் அப்பெண்ணுக்குப் பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் கொடுக்கப்பட்டன. அவற்றால் அவள் பாலைவனத்தில் தனக்காக தயார் செய்யப்பட்ட இடத்துக்குப் பறந்து செல்ல முடிந்தது. பாம்பிடமிருந்து அவள் அங்கே மூன்றரை வருட காலத்திற்கு கவனித்துக்கொள்ளப்பட்டாள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 பாலைநிலத்திலே தனக்கு ஆயத்தப்படுத்தப்பட்ட இடத்திற்குப் பறந்து போகக் கூடியதாக, அந்தப் பெண்ணுக்கு ஒரு பெரிய இராஜாளி பருந்தின் இரண்டு சிறகுகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவள் அந்த இராட்சதப் பாம்பின் பிடியில் அகப்படாமல், அங்கே ஒரு காலமும் காலங்களும் அரைக் காலமும் பராமரிக்கப்படுவாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 ஸ்திரீயானவள் அந்த பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது. Viz kapitola |