பிலேமோன் 1:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 நான் அதை உனக்குத் திருப்பிக் கொடுப்பேன் என்று பவுலாகிய நான் இதை என் சொந்தக் கையினாலே எழுதுகிறேன். இவ்வேளையில், உன்னையே நீ எனக்குக் கொடுக்கவேண்டியவனாய் இருக்கிறாய் என்று நான் உனக்குச் சொல்லவேண்டியதில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 பவுலாகிய நான் இதை என் சொந்தக் கரத்தினாலே எழுதுகிறேன், நான் அதைத் திரும்பச்செலுத்துவேன். நீர் உன்னைநீயே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டும் என்று நான் உமக்குச் சொல்லவேண்டியது இல்லையே. Viz kapitolaபரிசுத்த பைபிள்19 நான் பவுல். நானே என் கையால் உங்களுக்கு இதனை எழுதுகிறேன். நான் ஒநேசிமுவின் கடனைத் தீர்த்துவிடுவேன். உங்கள் வாழ்வுக்காக நீங்கள் என்னிடம் கடன்பட்டுள்ளதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லமாட்டேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 அதை உனக்குத் திருப்பிக் கொடுப்பேன் என்று பவுலாகிய நானே எனது சொந்தக் கைப்பட எழுதுகிறேன். இந்தச் சந்தர்ப்பத்தில், உன்னையே நீ எனக்குக் கொடுக்க வேண்டியவனாய் இருக்கின்றாய் என்பதை நான் உனக்குச் சொல்ல வேண்டியதில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே. Viz kapitola |