எண்ணாகமம் 26:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 எலியாபின் மகன்கள் நெமுயேல், தாத்தான், அபிராம் என்பவர்கள். இஸ்ரயேல் சமுதாயத்திற்கு அதிகாரிகளாயிருந்த தாத்தானும் அபிராமுமே மோசேயையும் ஆரோனையும் எதிர்த்துக் கலகம் பண்ணினார்கள். கோராகைப் பின்பற்றியவர்கள் யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணியபோது இவர்களும் அவர்களோடிருந்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 எலியாபின் மகன்கள் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பெயர்பெற்றவர்களாக இருந்து, யெகோவாவுக்கு எதிராகப் போராட்டம்செய்து, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக விவாதம்செய்தவர்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 எலியாப்புக்கு மூன்று குமாரர்கள். அவர்கள் நேமுவேல், தாத்தான், அபிராம் ஆகியோர். இவர்களில் தாத்தான் அபிராம் என்ற இரு தலைவர்களும், மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகத் திரும்பினவர்கள் ஆவார்கள். இவர்கள் கர்த்தருக்கு எதிராகச் செயல்பட்ட கோராகைப் பின்பற்றினார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 எலியாபின் குமாரர் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பேர்பெற்றவர்களாயிருந்து, கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம்பண்ணி, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக விவாதம்பண்ணினவர்கள். Viz kapitola |